ஸ்ரீலங்கா ரெலிகொம் ஷீரோ வன் விருதுகள் | தினகரன்

ஸ்ரீலங்கா ரெலிகொம் ஷீரோ வன் விருதுகள்

 

நாட்டின் முன்னணி தகவல் தொடர்பு தொழில் நுட்ப சேவைகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), தனது முதலாவது டிஜிட்டல் உயர் விருதுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
இலங்கையில் நடக்கவிருக்கும் இந்த “SLT Zero One Awards for Digital Excellence”நிகழ்வானது, டிஜிட்டல் துறையில் சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தும் தனிப்பட்டவர்கள், விளம்பர சின்னங்கள் மற்றும் நிறுவனங்களை இனங்காண்பதற்கானது. 

இது பற்றிய அறிவிப்பு, நேற்று (27) கொழும்பு ஹில்டனில் நடைபெற்ற மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செயற்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட இணைய தளங்களான www.01awards.lk, www.zerooneawards.lk மூலம் இலங்கையில் டிஜிட்டல் துறையில் சிறப்பாக செயற்படும் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்கற்பதற்கான தகவல்கள் வழங்கப்படும். 

இந்த ‘SLT ZeroOne‘ விருதுகள் பற்றி கருத்துரைத்த ஸ்ரீலரெ குழும தலைவர் திரு பி ஜி குமாரசிங்க சிறிசேன, “தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட இன்றைய சமுதாயத்தில் டிஜிட்டல் பாவனையானது அதிகரித்துவருகின்றது. 

இதனை புத்திசாதுரியமாக பயன்படுத்துவதன் மூலம் நிறுவனங்களும் வணிகங்களும் தமது சந்தைப்படுத்தல் செயல் நோக்கங்களை அடைவதை ஊக்கப்படுத்தும். டிஜிட்டல் முயற்சிகளை பொறுத்தவரையில் இலங்கை நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளது. எனினும், தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் டிஜிட்டல் புதுப்பித்தல் முயற்சிகளை மேற்கொள்வதும், அதன் அதிகூடிய பயன்களை அடைவதும் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

முக்கியமாக சந்தப்படுத்தல் தந்திரோபாயங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும்போது இவற்றை கடைப்பிடிக்கவேண்டிய தேவையுள்ளது.
 
ஸ்ரீலரெ குழும பிரதான நிறைவேற்றதிகாரி திரு திலீப விஜேசுந்தர இம்முயற்சி பற்றி தனது கருத்தை தெரிவிக்கையில், “இந்த சிறப்பு மிக்க விருதை வழங்குவது, நாம் டிஜிட்டல் ஊடக துறையை ஊக்கப்படுத்துவதற்கான சிறந்த வழியாக இருக்கும். ‘SLT 01’விருதுகளுக்காக தனிப்பட்டவர்கள், முகவர்கள், சிறிய நடுத்தர வணிகங்கள், விளம்பர சின்னங்கள், பல்தேசிய நிறுவனங்கள், மற்றும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சகலரும் தமது டிஜிட்டல் ஊடக திறன்களை வெளிப்படுத்துவதற்கு சம வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த விருது நிகழ்வை நாம் இன்னும் மேம்படுத்தி வருடாந்தம் கொண்டாடுவது பற்றி திட்டமிட்டுவருகிறோம்” என்றார். 

இந்த முயற்சி மூலமாக இக்கம்பனியானது, இலங்கையில் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான மேடையை அமைத்து வளர்ச்சியையும் புதுமை உருவாக்கங்களையும் ஊக்கப்படுத்தவுள்ளது. 

அத்துடன் டிஜிட்டல் ஊடகத்தில் உள்நாட்டு திறன்களை இனங்கண்டு சிறப்பிக்கும் மேடையாகவும் இந்த விருதுகள் அமையும்.  

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர்,  ஹரின் பெர்னாண்டோ; “ஸ்ரீலரெ இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியிருப்பது பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாடளாவிய அளவில் பலதரப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு இலங்கையின் டிஜிட்டல் சந்தையில் இது மாதிரியான விருது பிரச்சாரம் ஆரம்பித்திருப்பது இதுவே முதன்முறையாகும். 

டிஜிட்டல் துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான விருதுகள், தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தத்தமது புதுமை உருவாக்கங்களை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புக்களை வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும்” என்றார்.

இந்த விருதுகளின் தேர்வுக்குழு பற்றி வெகுவிரைவில் அறிவிக்கப்படும். SLT ZeroOne விருதுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு www.01awards.lk என்ற இணைய தளத்திற்கு செல்க.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...