ரெஜினாவுக்காக தாடி வளர்க்கும் ராணா | தினகரன்

ரெஜினாவுக்காக தாடி வளர்க்கும் ராணா

 

ரிஷாவுடன் பிரேக் அப் செய்துகொண்ட ராணா, சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நட்பு பாராட்டி வருகிறார். ஆனால் முன்புபோல் வெளிப்படையாக இல்லாமல் இரகசிய சந்திப்புகளாகவே உள்ளது.

பாகுபலி 2 படத்தில் பல்லாலதேவா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராணா ஒருவழியாக தனது வேலையை முற்றிலுமாக முடித்துக்கொடுத்துவிட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கு இயக்குனர் தேஜா இயக்கத்தில் நடிக்கவிருந்தார். பாகுபலி கதாபாத்திரத்துக்காக தாடி வைத்திருந்த ராணாவை ஷேவ் செய்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்க கூறினார் தேஜா.

இதற்கிடையில் ரெஜினா நடிக்கும் இருமொழி படமான ‘1945’ படத்தில் நடிக்க ராணா தாடியுடன் இருக்கும் தோற்றம் தேவைப்பட்டது. ரெஜினாவுக்காக தாடி வைப்பாரா? தேஜாவுக்காக தாடி எடுப்பாரா? என்று போட்டி நிலை உருவானதில் யாருக்கு ஓ.கே சொல்லப்போகிறார் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த போட்டியில் ரெஜினாவுக்குதான் வெற்றி கிடைத்திருக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள் ரெஜினா படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு தாடியை ஷேவ் செய்கிறேன் என்று தேஜாவை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார் ராணா. ஒருவாரம் ரெஜினாவின் படப்பிடிப்பில் ராணா கலந்து கொள்கிறார்.

ராணா கெஸ்ட் ரோலில் நடித்தாலும் கொஞ்சம் பெரிய கெஸ்ட் ரோலாம். இதன் படப்பிடிப்பை முடித்த கையோடு தாடிக்கு டாட்டா காட்டிவிட்டு மொழு மொழு கன்னத்துடன் தேஜா படப்பிடிப்புக்கு செல்கிறார்.

 


Add new comment

Or log in with...