அம்பாறை மாவட்டத்தில் வரட்சி

 
அம்பாறை மாவட்ட்த்தில் நிலவுகின்ற வெப்பமான காலநிலையினால்  நீர்த்தட்டுப்பாடு நிலவுவதுடன் கால்நடை பண்ணையிலிருந்து பெறப்படுகின்ற பாலின் அளவு ஜம்பது வீதமாக குறைவடைந்துள்ளது.

கடந்த இரண்டு மாத காலமாக மழைவீழ்ச்சி கிடைக்காததன் காரணத்தால் கால்நடை பிரதேசமான வட்டமடு, சாகாமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் புற்கள் வறண்டு பாலைவனமாக காட்சி தருகின்றன.

மலைப்பிரதேச காடுகள் வரண்டு காணப்படுவதால் வன ஜீவராசிகள், நீர், உணவு தேடி பல திசைகளிலும் அலைந்து திரிகின்றன. காட்டு யானைகள் வயல் பிரதேசங்களில் நுழைந்து சிறு ஓடைகளில் உள்ள சொற்ப அளவு நீரை உறுஞ்சிக் குடித்து வருகின்றன

இதே வேளை 2016 - 2017ம் ஆண்டுக்கான பெரும்போக செய்கைக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்ள விவசாயிகள் மழையினை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.

இம்முறை பெரும் போக நெற்செய்கை அடுத்த மாதம் ஒக்டோபர் இறுதிப் பகுதியிலே இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர் - என்.ஹரன்)

 


Add new comment

Or log in with...