6 வயது சிறுமி சித்திரவதை; சித்தி கைது (Video) | தினகரன்

6 வயது சிறுமி சித்திரவதை; சித்தி கைது (Video)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

6 வயது சிறுமி ஒருவர் அவரது வளர்ப்புத் தாயினால் மிகக் கொடூரமாக கொடுமைமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியை அடுத்து குறித்த பெண்ணும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் நீர்வேலியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தாய் மரணமடைந்தததை தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் முடித்துள்ளதாகவும், அப்பெண் குறித்த சிறுமியை எப்போதும் இவ்வாறு கொடுமைப்படுத்துவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடியோ காட்சியில், சிறுமியை குளிப்பதற்காக அப்பெண் அழைப்பதையும், அதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவிப்பதையும், பின்னர் அச்சிறுமி தனியே குளிக்க முற்படும்போது, அப்பெண் அச்சிறுமியை அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி குளிக்கச் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன், தான் உனது தாயை போல இல்லை என்று சொல்லும் அப்பெண், ஒரு கட்டத்தில் தலை முடியை இழுத்து தள்ளி விடுவதோடு, ஆத்திரமாக தாக்கவும் செய்கிறார்.

குறித்த காட்சிகள் உங்கள் மனதை பாதிக்கலாம் என்பதால், மன வலிமை குறைந்தோர் இக்காட்சிகளை பார்ப்பதிலும் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

[video:https://youtu.be/umAVcQx1ntI width:673 height:600]

 

 


Add new comment

Or log in with...