குறித்த தொழில் வர்க்கத்தினர் முன்னுரிமையானவர்கள் என நாம் கருதவில்லை | தினகரன்

குறித்த தொழில் வர்க்கத்தினர் முன்னுரிமையானவர்கள் என நாம் கருதவில்லை

குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்கின்றவர்கள் ஏனையவர்களை விட முன்னுரிமைகளை எதிர்பார்ப்பதை நாம் முற்றாக எதிர்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், கருத்துத் தெரிவித்துள்ள அவர், "எந்தவொரு நபரும் ஏனையோரிலும் பார்க்க மிக விசேட சலுகைகளை கொண்டவர்களாகவோ, எந்தவொரு தொழிலைச் சார்ந்தவர்களும் ஏனைய தொழில் சார்ந்தவர்களிலும் பார்க்க விசேட சலுகைகளை கொண்ட தொழிலை புரிபவர்களாகவோ நாம் கருதவில்லை" என பிரமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

"ஆயினும் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது, தொழில்சார்ந்த உரிமைகளை வழங்குவது மற்றும் இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களுக்கு உச்ச சேவையை உரிய முறையில் வழங்குவது தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்குவோம்" என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் (15) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இடம் தருமாறு கோரி அடையாள வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே பிரமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...