பராஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெண்கலம் | தினகரன்


பராஒலிம்பிக்கில் இலங்கைக்கு வெண்கலம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை முதலாவது பதக்கத்தை பெற்றுள்ளது.

இன்று (14) இடம்பேற்ற F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது.

இவர், 58.23 மீற்றர்கள் தூர இலக்கை எட்டியதன் மூலம் இப்பதக்கத்தை வென்றார் என்பதோடு, இது இவரது தனிப்பட்ட அதிகூடிய இலக்காகும். அத்துடன், நான்காம் இடத்தைப் பெற்ற ஈரான் நாட்டவர் 54.67 மீற்றர் தூர இலக்கை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்தியாவின் தேவேந்திரவுக்கு தங்க பதக்கமும் (63.97), சீனாவின் குஓ சுனிலாங்கிற்கு (59.93) வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...