5 வர்த்தகர்களுக்கும் தொடர்பில்லை; மேலும் ஒருவர் கைது | தினகரன்


5 வர்த்தகர்களுக்கும் தொடர்பில்லை; மேலும் ஒருவர் கைது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட, பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சகீப் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபருக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 9 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக கருதப்பட்ட 5 வர்த்தகர்கள் மீது வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நீதவான் இதன்போது அறிவித்தார்.

குறித்த நபர்கள் இக்கொலைச் சம்பவத்துடன் சம்பந்தமற்றவர்கள் என இரகசிய பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே நீதவான் நிஷாந்த பீரிஸ் குறித்த தடை உத்தரவை நீக்குவதாக அறிவித்தார்.

 


Add new comment

Or log in with...