துமிந்த உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை | தினகரன்


துமிந்த உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (08) வழங்கப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று வழங்கப்பட்ட குறித்த தீர்ப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாரத லக்‌ஸ்மன் பிரேமசந்திரன் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், துமிந்த சில்வா உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக காணப்படுகின்றனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில், ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக, எஸ்.பி.என். மொராயஸ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவினால் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தைச் சூழ விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...