சரத் வீரவங்சவுக்கு செப். 07 வரை விளக்கமறியல் (Update) | தினகரன்


சரத் வீரவங்சவுக்கு செப். 07 வரை விளக்கமறியல் (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பொதுச் சொத்து முறைகேடு தொடர்பான சட்டத்தின் கீழ், அரசாங்க வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் குற்றச்சாட்டில் கைதான சரத் வீரவங்சவுக்கு செப்டெம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

குறித்த முறைகேடு காரணமாக, அரசாங்கத்திற்கு ரூபா 10.5 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 

விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் மூத்த சகோதரரான சரத் வீரவங்ச இன்று (01) கைது செய்யப்பட்டார்.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினராலேயே (FCID) குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...