ரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மாயம் | தினகரன்

ரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மாயம்

றிஸ்வான் சேகு முகைதீன்

களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றால் இறக்குமதி செய்யப்பட்ட ரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மூட்டைகள் வந்து சேரவில்லை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தான் இறக்குமதி செய்த 540 சீனி மூட்டைகளை, போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும் அது இன்னும் தன்னிடம் வந்து சேரவில்லை என, களனி பெதியாகொட பகுதியிலுள்ள நிறுவனத்தின் குறித்த உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூட்டை கொள்கலன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சீனி மூட்டைகளைக் கொண்ட கொள்கலன், கொழும்பு துறைமுகத்திலிருந்து, கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி அந்நிறுவனத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, பின்னர் பேலியகொட, நுகே வீதியில் தனியாக விட்டுச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்திரையிடப்பட்டிருந்து குறித்த கொள்கலனின் முத்திரையும் உடைக்கப்பட்டுள்ளதோடு, கொள்கலன் வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...