இராஜகிரியவுக்கு மாற்று வழியை பயன்படுத்தவும் | தினகரன்

இராஜகிரியவுக்கு மாற்று வழியை பயன்படுத்தவும்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இராஜகிரிய - வெலிக்கடை சந்தியில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டே குறித்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

நாளை (31) முதல் குறித்த பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பைன் நாட்டின் ரூபா. 4.3 பில்லியன் (28 மில்லியன் யூரோ) இலகு கடன் உதவியுடன் அமைக்கப்படவுள்ள குறித்த பாலத்தின் நீளம், 558 மீற்றர்களாகும்.

இப்பாலத்தில் நான்கு வீதி வரிசைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[video:https://youtu.be/p6D31to15SU width:673 height:380]

 


Add new comment

Or log in with...