தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்

 

தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றினை இன்று (29) கையளித்துள்ளனர்.

சுமார் 600இற்கும் மேற்பட்ட பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் பிரதேச செயலாளரின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இராணுவத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில்,

பொதுமக்களிற்கு கையளிக்கப்படும் நிலங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் தொடர்பில், வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் இன்றைய நிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பிரதேச செயலர் தன்னிச்சையாக செயற்படுவதுடன், சுயஇலாபபத்திற்காகவும் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் தனது சுயவிருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மேற்கொள்வதாகவும், பொது மக்கள் மற்றும் ஏனையோரின் நலன்சார்ந்த செயற்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு சார்பாக செயற்படும் குறித்த பிரதேசசெயலரை இடமாற்றம் செய்யுமாறும், அவ்வாறு செய்யத்தவறின் எதிர்வரும் காலத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் மக்கள் அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மகஜனரி பிரதிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...