இத்தாலி பூகம்பத்தில் இலங்கையருக்கு பாதிப்பில்லை | தினகரன்


இத்தாலி பூகம்பத்தில் இலங்கையருக்கு பாதிப்பில்லை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

 

இதுவரை 247 பேர் பலி

மத்திய இத்தாலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தின் காரணமாக இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொ தெரிவித்துள்ளார்.

நேற்று (24) இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான குறித்த பூகம்பத்தின் காரணமாக இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கவோ, பெற்றுக்கொள்ளவோ 0039 345 603 5197 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...