நோட்டன் - ஹட்டன் வீதி போக்குவரத்துக்கு தடை | தினகரன்

நோட்டன் - ஹட்டன் வீதி போக்குவரத்துக்கு தடை

 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தோக்கத்தின் மண் மேட்டிலிருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், நோட்டன் - ஹட்டன் பிரதான பாதையில்  போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) திங்கட்கிழமை பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, நோட்டன், லக்‌ஷபான பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் காரணமாக, மின் கம்பம் உடைந்து வீழ்ந்துள்ளமையினால் காசல்ரி பிரதேசத்திற்கான மின் விநியோகமும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் ஒஸ்போன் பகுதிகளுக்கு பயணிகளின் நலன் கருதி தனியார் பஸ் குறித்த பகுதியிலிருந்து சேவையிலீடுபடுகின்றன.

பாதையில் வீழ்ந்துகிடக்கும் மரத்தினை அகற்ற நோர்வூட் பாதை அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்துள்ளதுடன் ஹட்டன் மின்சார சபையினருக்கும் அறிவித்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகள் மாற்று வழியான, கினிகத்தேன - தியகம பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராமசந்திரன்)

 


Add new comment

Or log in with...