வெங்காய இறக்குமதி வரி ரூ. 15 இனால் அதிகரிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி, ரூபா 15 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராமிற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட ரூபா 25 வரியானது, ரூபா 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சினால் குறித்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமுகமாக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...