50 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்; டிபன்டரில் மோதி விபத்து | தினகரன்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்; டிபன்டரில் மோதி விபத்து

 

டிப்பர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க முற்பட்ட போது 50 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நானுஓயா நகரப்பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது, கீழே உள்ள பாதையில் பயணம் செய்த டிபன்டர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் டிப்பேன்டர் வாகனமும் சேதமாகியுள்ளது.

இன்று (20) காலை இடம்பெற்ற குறித்த விபத்தின் காரணமாக டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து காரணமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார், இது குறித்தான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...