ரயிலில் மோதுண்ட 4 யானைகள் புதைக்கப்பட்டன | தினகரன்

ரயிலில் மோதுண்ட 4 யானைகள் புதைக்கப்பட்டன

 

ரயிலில் மோதுண்டு மரணமான நான்கு யானைகளும் விசேட வழிபாட்டின் செட்டிக்குளம் வனப்பகுதியில் இன்று (18) வியாழக்கிழமை  புதைக்கப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (16) இரவு 11.30 மணியளவில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில்  செட்டிக்குளம்  மெனிக்பாம் புகையிரதவீதி பகுதியில் வைத்து மோதுண்டு ஒரு பெரிய  யானையும் மூன்று  யானைக்குட்டிகளும் மரணமடைந்தன.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸாரும் மடு வனவிலங்கு அதிகாரிகளும் இறந்த யானைகளை அங்கிருந்த அகற்றியதோடு, இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தப்பின், குறித்த யானைகளை புதைப்பதற்கு முடிவு செய்தனர்.

அதன் பின்னர் இன்று, பிரதேச மக்களும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து விசேட  வழிபாட்டின் பின் செட்டிக்குளம் வனப்பகுதியில் குறித்த யானைகளை புதைத்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராமசந்தரன்)

 


Add new comment

Or log in with...