புகையிரதத்துடன் மோதி 4 காட்டு யானைகள் பலி | தினகரன்

புகையிரதத்துடன் மோதி 4 காட்டு யானைகள் பலி

ரயில் மோதியதில் நான்கு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம்(16)செட்டிகுளம்பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலைமன்னாரில் இருந்து நேற்று முன்தினம் இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கூட்டமாக நின்ற காட்டுயானைகள் மோதியுள்ளன. இதன்பேது நான்கு காட்டு யானைகள் உயிரிழந்தன.இவ்விபத்து அன்றைய தினம் இரவு 11.45 மணியளவில்

செட்டிக்குளம் மினிக்பாம் புகையிரத வீதியில் இடம்பெற்றது.

உயிரிழந்த 4 யானைகளில் ஒன்று குட்டி யானை எனவும் தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் உயிரிழந்த யானைகளின் உடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த யானைகளை பார்வையிட அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(எல்.ஆர்)


Add new comment

Or log in with...