நாமலின் வழக்கு தொடர்பில் இரு பெண்களுக்கு விளக்கமறியல்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கவர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ஷ மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர்களை இன்று (16) நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கே , கொழும்பு அலுத்கடை நீதிமன்றினால் இவ்வாறு அழைப்பாணை விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இருவரும், குறிப்பிட்ட இரு நிறுவனங்களினதும் பணிப்பாளர்களாக செயற்பட்டவர்கள் என்பதோடு,  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் மகளான சுஜானி போகொல்லாகம இன்றைய தினம் (16) நீதிமன்றிற்கு ஆஜராகியிருக்கவில்லை என்பதோடு, தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான நித்யாவை எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

லண்டன், எபர்டீன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சுஜானி போகொல்லாகம, திறைசேரியின் ஆலோசக தரத்திலான பதவியில் இருந்தார் என்பதோடு, பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த பதவியை தனது தந்தையான முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் உதவியுடன் அப்பதவியை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவர் கிறிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...