கம்மன்பில வாழைத்தோட்ட பொலிஸில் ஆஜர் | தினகரன்

கம்மன்பில வாழைத்தோட்ட பொலிஸில் ஆஜர்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் செயலாளரும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வாழைத்தோட்ட பொலிஸில் ஆஜரானார்.

இளைஞர்  ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் ஹிருணிகா பிரேமசந்திர எம்.பி. பொலிஸில் சரணடைந்தததை அடுத்து, அவருக்கு பிணை வழங்கப்பட்ட விதம் தொடர்பில் கம்மன்பில தெரிவித்த கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பொலிஸில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுமாறு கோரப்பட்டதை அடுத்தே, அவர் இவ்வாறு பொலிஸிற்கு ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...