சரத் டி அப்றூ அகால மரணம் | தினகரன்

சரத் டி அப்றூ அகால மரணம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் டி அப்றூ அகால மரணமடைந்தார்.

இன்று (15) அவரது வீட்டில் வைத்து ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தடுக்கி வீழ்ந்த அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தனது வீட்டில் பணிபுரிந்த, பணிப்பெண் ஒருவரை கடந்த வருடம் (2015) ஜூன் மாதமளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அவரை நீதிமன்ற பதவியிலிருந்து இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், கல்கிஸ்ஸை நீதிமன்றில் அவர் மீது மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, அண்மையில் அவ்வழக்கு சமரச சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...