எரிபொருள் நிரப்ப வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு | தினகரன்

எரிபொருள் நிரப்ப வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு

 

யாழ்ப்பாணம் உரும்பிராய்  எரிபொருள் நிரப்பு  நிலையத்தில் இரண்டு மோட்டார் வண்டிகள் திடிரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று (12) காலை எரிபொருளை நிரப்புவதற்காக குறித்த இடத்திற்கு வந்த குறித்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று (Pulsar) எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் தீப்பிடித்துள்ளதோடு, இதேவேளை அதற்கு அருகிலிருந்து மோட்டார் சைக்கிளுக்கும் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன ஆயினும் குறித்த இடத்திலிருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டு நீரை ஊற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் காரணமாக எவ்வித பாரிய சேதங்களோ, உயிர் சேதமோ ஏற்படாது தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்புநிலையத்தில் ஒரு வருடத்திற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புங்குடுதீவு தினகரன் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...