போதைப்பொருளாக மருந்து வில்லை; வைத்தியசாலை ஊழியர் கைது | தினகரன்

போதைப்பொருளாக மருந்து வில்லை; வைத்தியசாலை ஊழியர் கைது

 

போதையூட்டும் மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கும்இ இளைஞர்களுக்கம் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஊழியரொருவர் 40 மாத்திரை வில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்;.

குறித்த சந்தேக நபர் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்த வில்லைகளை எடுத்து வந்து சிறுநீரகப்பிரிவிற்கு முன் நிற்குமாறு சூட்சுமமாக குற்றத்தடுப்பு பிரிவால் தொலைபேசி அழைப்பின் மூலம் கூறப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை சோதனையிட்டபோது பத்து வில்லைகளடங்கிய நான்கு மாத்திரை பக்கட்டுகளுடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

சிறுசீரக நோயாளர்களுக்கு வைத்திய ஆலோசனை மூலம் வழங்கப்படும் மாத்திரை வர்க்கமொன்றையே விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு காட் 800 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகவுமஇ; இழைப்பாறுவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் மாத்திரமே உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. 

(மிஹிந்தலை தினகரன் நிருபர்-அபூபக்கர் ராபி)

 


Add new comment

Or log in with...