பியசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

பியசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்லை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட ஜீப் வண்டியை, பாராளுமன்ற பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மீள கையளிக்கவில்லை எனும் குற்றச்சாட்டிற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான குறித்த வழக்கு, இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவரது சாரதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது சாரதி ரூபா 10 ஆயிரம் பணம் மற்றும் ரூபா 3 இலட்சம்கொண்ட சரீரப் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 29 ஆம் திகதி, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் (CCD) கைது செய்யததோடு, பொதுச் சொத்துகள் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...