சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (04) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மாற்றப்பட வேண்டிய தொகுதி அமைப்பாளர்கள் தொடர்பிலும் சுதந்திரக் கட்சியின் 65 ஆவது  ஆண்டு நிறைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை கூட்டு எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்று (04) பி.ப. 6.00 மணிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளின் சந்திப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆண்டு நிறைவு தினமாகும்.

1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் 02 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...