முச்சக்கரவண்டி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து | தினகரன்

முச்சக்கரவண்டி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

 
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03) இடம்பெற்ற இவ்விபத்தில், நாவலப்பிட்டி - தலவாக்கலை பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே நாவலப்பிட்டி கல்லோயா பகுதியிலிருந்து பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் படுகாயமுற்ற நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 

 

Add new comment

Or log in with...