275 பயணிகளுடன் தரையிறங்கி தீப்பிடித்த விமானம் (Video) | தினகரன்


275 பயணிகளுடன் தரையிறங்கி தீப்பிடித்த விமானம் (Video)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

எமிரேட்ஸ் விமானசேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அசாதாரணமான முறையில் தரையிறங்கி தீப்பற்றி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலமான திருவனந்தபுரத்திலிருந்து காலை 7 மணியளவில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

EK521 எனும் குறித்த விமானத்தில் 275 பயணிகள் பயணித்துள்ளதோடு, சம்பவத்தை அடுத்து, பயணிகள் உடனடியாக பாதுகாப்பான வகையில் காயங்களின்றி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துபாய் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில், தீப்பிடித்த விமானத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[video:https://www.youtube.com/watch?v=1pI66jrI5dU width:673 height:380]

 


Add new comment

Or log in with...