லசந்தவின் சாரதி அடையாளம் காட்டிய புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

லசந்தவின் சாரதி அடையாளம் காட்டிய புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

பிரபல ஊடகவியலாளரும் சண்டேலீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்பு அதிகாரியை எதிர்வரும் ஓகஸ்ட் 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (03) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

குறித்த கொலை இடம்பெற்றவேளையில், அதனை நேரடியாக கண்டதாக தெரிவிக்கப்படும் சாட்சியாளர் பக்கவாத நோய் காரணமாக இன்று சமூகமளிக்காததன் காரணமாக, இன்று இடம்பெறவிருந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததன் காரணமாகவே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

குறித்த நபர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி, இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என்பதோடு, கடத்தப்பட்ட லசந்தவின் சாரதியால் குறித்த அதிகாரி அடையாளம்காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லசந்த, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...