இரு மாணவிகள் தீ மூட்டி தற்கொலை | தினகரன்

இரு மாணவிகள் தீ மூட்டி தற்கொலை

 

பதுளை - மடுல்சீமை ரோபரி தோட்டத்தில் 17 வயதுடைய இரு மாணவிகள் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் நேற்று (01) நடந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டுள்ள இரு மாணவிகளும் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் நல்ல தோழிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரில், ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக அவரது தந்தை கடுமையாக கண்டித்துள்ளதாகவும், இதை தாங்க முடியாமலேயே இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

செல்வகுமார் காஞ்சனா மற்றும் பரமேஸ்வரன் அருட்செல்வி எனும் இரு மாணவிகளே இவ்வாறு தங்கள் உயிர்களை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து கடுமையான தீக்காயங்களுக்குள்ளான மாணவி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் இன்று (02) மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. 

இதேவேளை, இவர்களது சடலங்களின் பாகங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)


Add new comment

Or log in with...