பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தது | தினகரன்


பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தது

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு அணியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாத யாத்திரை கொழும்பை வந்தடைந்துள்ளது.

'ஜன சடண பாத யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ள குறித்த பாத யாத்திரை காரணமாக, கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (01) கிரிபத்கொடை நகர மத்தியிலிருந்து ஆரம்பமான குறித்த பாத யாத்திரை, பொரளை கெம்பல் மைதானத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் காலி முகத்திடல், ஹைட் பார்க் ஆகிய இடங்களில் ஏதாவதொன்றில் நிறைவடையும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் பல்வேறு விதமாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பாத யாத்திரைக்கு, பொரளை கெம்பல் மைதானத்தில் ஒன்றுகூடுவதற்கான அனுமதிக் கடிதத்தை, சற்றுமுன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பொலிஸார் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...