பாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி? | தினகரன்


பாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி?

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வரும் 'மக்கள் போராட்டம் பாத யாத்திரை' (ஜன சட்டன பாத யாத்ராவ) இன்றைய நாள் (29) நிகழ்வுக்கு போதியளவிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குறித்த பாத யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று, சுமார் மூவாயிரம் பேரே அதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆயினும், சுமார் ஒரு இலட்சம் பேர் வரை எமது பாத யாத்திரையில் கலந்துகொள்வர் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பாத யாத்திரை நிகழ்வில், மஹிந்த அணியைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதிலிருந்து தவிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் மிகக் குறைந்த நேரத்திற்கே பாத யாத்திரையில் கலந்துகொண்டிருந்ததாகவும் பின்னர் அவர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த பாத யாத்திரை இன்றையதினம் (29) கேகாலை நெலும்தெனிய நகரை அடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...