எழுத்து, இலக்கண பிழை விட்ட ட்ரம்ப்; மற்றுமொரு சர்ச்சை

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களிமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நேற்றைய தினம் (24) அவரது உத்தியோகபபூர்வ ட்விற்றர் கணக்கில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் பல்வேறு பிழைகளை அவர் விட்டிருந்ததோடு, அது பின்னர் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் Their (அவர்களது) என்பதற்கு பதிலாக There (அங்கு) எனவும் Waste (தேவையற்றது) என்பதற்கு பதிலாக Waist (இடை) என குறிப்பிட்டிருந்தார்.

இது பல்வேறு பிரபலங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அவற்றில், "உங்களுக்கு ஜனாதிபதியாவதற்கு எவ்வித தகுதியும் இல்லை", "இந்த முட்டாளை பாருங்கள், அடிப்படை எழுத்து, இலக்கணம் கூடத் தெரியவில்லை", "முதலில் எழுத்துக்கூட்ட பழகவும்.. உங்களுக்கு ஜனாதிபதியாகும் ஆசையா" என்பது போன்ற பல்வேறு பதிவுகளை இட்டிருந்தனர்.

ஏற்கனவே ட்ரம்பின் மனைவி மெலேனியா ட்ரம்ப் (Melania Trump), ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா பேசிய உரை ஒன்றை அப்படியே பிரதி பண்ணி பேசி சர்ச்சைக்குள்ளான நிலையில் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...