அயல்வீட்டாரிடம் வீரம் காட்டிய தமிழ் இராணுவ சிப்பாய் | தினகரன்

அயல்வீட்டாரிடம் வீரம் காட்டிய தமிழ் இராணுவ சிப்பாய்

 

RSM

தந்தையும்,மகனும் வைத்தியசாலையில்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த புதன்கிழமை (20) இரவு எட்டு மணியளவில், விடுமுறையில் வீடு சென்ற குறித்த இராணுவ வீரர், அயல் வீட்டாரான மேற்படி தந்தையையும், மகனையும் கடந்த கால கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யார் என்று தெரியுமா என கடும் தொனியில் கேள்வி எழுப்பியவாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டு கிசிசைப்பெற்று வருகின்றவா்கள் குறிப்பிடுகின்றனா்.

குறித்த இராணுவச் சிப்பாய்  தமிழ் இளைஞன் எனவும் அன்மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்டவா் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் (23) என்பவருமே தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகின்றனா்.

சம்பவம் தொடா்பில் குறித்த இராணுவ சிப்பாய் முழங்காவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தாக்கப்பட்டவா்கள் வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வரும் நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

(கிளிநொச்சி குறூப் நிருபா் - எம். தமிழ்செல்வன்)

 


Add new comment

Or log in with...