ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும் வெற்றிப் படம் கபாலி! | தினகரன்

ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும் வெற்றிப் படம் கபாலி!

 

RSM

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படம், மிக முக்கியமான படம் கபாலி என்று, படத்தின் பிரிமியர் எனப்படும் சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர். 

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த ரஜினியின் கபாலி படத்தின் முதல் பிரிமியர் காட்சி மலேசியா (பெடரல் ஹோல்) மற்றும் சிங்கப்பூரில் நேற்று (21) இரவு இடம்பெற்றது.

இதேவேளை, பிரான்ஸின் ரெக்ஸ் அரங்கம், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் கபாலி சிறப்புக் காட்சிகள் இடம்பெற்றன.

இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள் படத்துக்கும் படத்தின் நாயகன் ரஜினிக்கும் பாராட்டு மழைப் பொழிந்து வருகின்றனர். 

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் கபாலி என்றும், இதுவரை அவர் பார்த்த வெற்றிகளிலேயே மிகப் பெரிய வெற்றி கபாலிதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் இந்தப் படத்தை நூறு பாட்ஷா + முள்ளும் மலரும் படங்களுக்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் ரஜினிக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தரும் என்பது பல ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.

ரஜினியின் ஸ்டைல், உடல் மொழி, நடிப்பு எல்லாமே இந்தப் படத்தில் புது மாதிரியாக இருப்பதாகவும், அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு ரஜினி மிக கம்பீரமாக காட்சியளிப்பதாகவும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரஜினி பொதுமக்களுக்கும் மிகவும் பிடித்த படமாக உள்ளதாக  தெரிவித்துள்ளனர். கபாலியின் சிறப்புக் காட்சி மூலம் கிடைத்துள்ள இந்த ரிசல்ட் தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வைத் தந்துள்ளது.

 


Add new comment

Or log in with...