பாகுபலி சாதனையை முறியடிக்கும் கபாலி | தினகரன்


பாகுபலி சாதனையை முறியடிக்கும் கபாலி

 

இன்று திரைக்கு வர இருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் என பலர் நடித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் திகதி தான் திரைக்கு வருகிறது. பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...