270 கிலோ ; இலங்கையில் அதிகூடிய கொக்கேன் தொகை மீட்பு | தினகரன்

270 கிலோ ; இலங்கையில் அதிகூடிய கொக்கேன் தொகை மீட்பு

பேலியகொட உணவு களஞ்சியசாலை ஒன்றில் சுமார் 270 கிலோ கொக்கேன் மீட்கப்பட்டள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய கொக்கேன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை சுமார் 270 கிலோ கிராம் கொக்கேன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு கொள்கலன்களை சோதனையிட வேண்டியுள்ளதாக, போதைத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணியில் போதைத் தடுப்பு பிரிவினருடன் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலன்களை சீனி கொண்டு செல்வதற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் 93 கிலோ கிராம் கொக்கேன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் கொக்கேன் கிலோ ஒன்று 1,500 டொலரிற்கு விற்கப்படுகின்றது. (அந்நாட்டில் 1 கிராம் கொக்கேனை வைத்திருக்க அனுமதி உண்டு)


Add new comment

Or log in with...