பாடசாலை மாணவியை அழைத்துச் சென்றவர் கைது

 

RSM

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொரவரை அழைத்துச் சென்று மாணவியை தலைமறைவாக வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை கோழி, இறைச்சிக்கடை வீதியைச் சேர்ந்த 28 வயதான எம். முஹம்மட் பர்ஸாத் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரசேத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (18) காலை காத்தான்குடியைச் சேர்ந்த 1 6வயதுடைய கல்விப் பொதுத்தராதர சாதரண தரம் கற்கும் மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் பெற்றார் அவர்களது மகளை தேடி வந்துள்ளதோடு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்

இந்நிலையில், குறித்த மாணவி அடுத்த நாள் (19) வீடு வந்து சேர்ந்துள்ளார்.

குறித்த மாணவியை விசாரணை செய்த காத்தான்குடி பொலிசார் மாணவியை பாடசாலை சீருடையுடன் வாழைச்சேனைக்கு அழைத்துச் சென்று மறைவாக வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவியை விசாரணை செய்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (20) அனுமதித்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்று (21) அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் காத்தான்குடியிலும் வாழைச்சேனையிலும் எற்கனவே திருமணம் செய்த குடும்பஸ்தர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...