இணைச்சட்டமும் அதன் உள்ளடக்கமும் | தினகரன்


இணைச்சட்டமும் அதன் உள்ளடக்கமும்

 

இ ணைச் சட்டம் என பொதுமொழி பெயர்ப்பில் நாம் அழைக்கும் திருநூல் பழையமொழி பெயர்ப்பில் ‘உபாகமம்’ என அழைக்கப்பட்ட ‘தோரா’ எனப்படும் விவிலிய ஐநூலின் ஐந்தாவது நூலாகும்.

எபிரேய மொழியில் Devarin என்பது ‘உரைக்கப்பட்ட சொற்கள்’ என்று அர்த்தமாகும்.

இது வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரயேலர் நுழைவதற்கு முன் அவர்கள் மோவாபின் சமவெளிப் பரப்பிலிருந்தபோது மோசே அருளிய மூன்று பிரசங்கங்களை கொண்டதாகும்.

முதற் பிரசங்கம் 1:1-4:43 அவர்கள் நாற்பதாண்டுகள் பாலை நிலத்தில் அலைந்து திரிந்து அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்திருப்பதை எடுத்துக் கூறி அவர்கள் தமது அறிவுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதோடு முடிவடைகின்றது.

இரண்டாவது பிரசங்கம் 4:44-29:1 அவர்கள் ‘ஏகக் கடவுள்’ கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தான் கொடுத்த அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறுகின்றது. இதில் தான் அவர்க் வாக்களிக்கப்பட்ட இடத்தினை சுதந்தரித்துக் கொள்வது தங்கியிருக்கின்றது எனக் கூறுகின்றது.

மூன்றாவது பகுதியோ 29:2-30:20 அவர்கள் விசுவாசமற்றவர்களாகப் போனால் அந்நிலம் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்படும் என்றும், அவர்கள் மனம் திரும்பி தம் பாவங்களுக்காக வருந்தினால் அந் நிலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வர் என்றும் கூறுகின்றது. இணைச் சட்ட நூலில் மிக முக்கியமான வசனமாக 6.4 Shema Yisrael )எனப்படும் வசனம் கூறப்படு கின்றது. இது யூத அடையாளத்தின் ஆணிவேராகும். இயேசு இதனையும் இதனைத் தொடரும் 5ம் வசனத்தையும் மாற்று 1:28-34 பகுதியில் பெரிய கட்டளையாக எடுத்துரைக்கின்றார். யூத மார்க்கத்தின் அடையாளமாக விளங்கும் இது ஒவ்வொரு நாளும் இருமுறை அவர்களால் பக்தியோடு உச்சரிக்கப்பட்டது.

இந்நூலின் 12ம் அதிகாரம் முதல் 26ம் அதிகாரம் வரை Deuteronomic Code எனப்படும் கட்டளைகளைக் கொண்ட பழமையான பகுதியாகக் கருதப்படும் அதிலிருந்தே யூதர்கள் தாம் வாழப்போகின்ற கானான் தேசத்தில் எப்படியாக வாழவேண்டும் என்ற கோட்பாடுகளை உருவாக்கினார் என்பர்.

இவ்வாறு இஸ்ரயேலர்களின் தேர்வு, பிரமாணிக்கம், கீழ்ப்படிதல் மற்றும் இறைவனின் ஆசிர்வாதங்களைப் பெறுதல் பற்றி இந்நூல் கூறுகிறது.

குறிப்பாக இறைவனின் ஆசீரை எடுத்துரைக்கின்றது. இவ்வாறு இணைச் சட்டத்தின் கருவானது இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையில் உள்ள உடன்படிக்கையையும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பதற்கான அவசியத்தையும் வெளிப்படுத்துகின்றது.

அவர்கள் கீழ்ப்படிந்தால் செல்வம், செழிப்பு கிடைக்கும் எனவும் கீழ்ப்படியாவிட்டால் சாபங்களும் தண்டனைகளும் கிடைக்கும் எனவும் கூறுகின்றது.

இணைச் சட்டத்திற்கான கிறிஸ்தவ விளக்கத்தின்படி இஸ்ரயேலின் மீள் எழுச்சியைப் பற்றிய இறைவாக்கானது இயேசு கிறிஸ்துவிலும் திருச்சபையின் தோற்றத்திலும் நிறைவேறியுள்ளது. (Luke 1-2m Acts 2-5)

என்னைப் போன்றதொரு இறைவாக்கினர் என்றுமோசே கூறுவது இயேசுவில் நிறைவேறுகின்றது. 18:15 (தி.ப 3:22-23)

அதுபோலவே திருத்தூதரான பவுலின் கருத்துப்படி மோசேயின் உடன்படிக்கையை இயேசுவில் நாம் கொள்ளும் விசுவாசமும் நற்செய்தி (புதிய உடன்படிக்கை)யும் மேலோங்கி நிற்கின்றன.

 

சகோ. டிவோட்டா...

 


Add new comment

Or log in with...