குளவி கொட்டி 17பேர் பாதிப்பு | தினகரன்


குளவி கொட்டி 17பேர் பாதிப்பு

 ஹற்றன் சுழற்சி நிருபர்

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டரத்மல தோட்டத்தில் நேற்று (15) காலை தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்கள் குளவிகொட்டுக்கு இழக்காகி தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவிகளை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...