ஆரையம்பதி பிரதேச செயலக பெயர்ப்பலகை நாசம் | தினகரன்


ஆரையம்பதி பிரதேச செயலக பெயர்ப்பலகை நாசம்

 

RSM

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்பகை விசமிகளால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இப்பெயர்பலகை கடந்த வாரமே வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்று (15) அதிகாலையே நடந்திருக்கலாமெனவும் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை 
எனவும் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)

 


Add new comment

Or log in with...