நாமலைப் பார்க்க உறவினர்கள், எம்.பிக்கள் (Photos) | தினகரன்

நாமலைப் பார்க்க உறவினர்கள், எம்.பிக்கள் (Photos)

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

நேற்றைய தினம் (11) சிறையில் வைக்கப்பட்ட நாமல் ராஜபக்‌ஷ எம்.பியை பார்வையிட அவரது உறவினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

இன்று (12) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு, நாமலின் சகோதரர்களான யோஷித, ரோஹித மற்றும் அவரது தாய் ஷிரந்தி ஆகியோர் வந்திருந்தனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்டோரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...