ரூபா. 6 மில்லியன் கஞ்சா மீட்பு; பருத்தித்துறை நபர் கைது | தினகரன்

ரூபா. 6 மில்லியன் கஞ்சா மீட்பு; பருத்தித்துறை நபர் கைது

 

RSM

 

6 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை  யாழ். பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சஞ்சீவ தர்மரட்ணே தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த நபர் இன்று (05) கைதுசெய்யப்பட்டார்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (35) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஆவார்.

யாழ். குருநகர் சவக்காலை சந்தியில் வைத்து இன்று (05) அதிகாலை துவிச்சக்கரவண்டியில் குறிப்பிட்ட தொகை கேரளா கஞ்சாவை சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் பின்னர், வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் சோதனையிட்ட போது, 
சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரளா கஞ்சாம் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சஞ்சீவ தர்மரட்ணே தெரிவித்தார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...