நாமலுக்கு வழக்கு; ஜோன்ஸ்டனுக்கு பிணை | தினகரன்


நாமலுக்கு வழக்கு; ஜோன்ஸ்டனுக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விசாரணை ஒன்றிக்கு வாக்குமூலம் பெறுவதற்காக வருகை தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் அதனை புறக்கணித்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சதொச ஊழியர்களை அரசியல் வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் மொஹமட் சாபிரு ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 05 வழக்குகளில் ஒரு வழக்கிற்காக, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...