சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி!

 

RSM
 
சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைப்பேம் எனும் தொனிப் பொருளில் சித்திரவதைக்கு எதிராக இன்று (30) வியாழக்கிழமை மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியொன்று நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற சித்திரவதைகள் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இடம் பெறாமல் தடுப்பதுடன் அவர்களை சித்திரவதைகள் வன்முறைகளில் இருந்து பாதுகாக்குமாறு இந்த கவன ஈர்;ப்பு பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பேணியில் கலந்து கொண்டோர் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி, இல்லத்து வன்முறையை இல்லா தொழிப்போம், வன்முறைகளில் மனித உயிர்களை பாதுகாப்போம், சித்திரவதைக்குள்ளானவர்களுக்கு என்றும் உதவுவோம், சித்திரவதை ஒவ்வொருவரையும் பாதிக்கும் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அதே போன்று வண்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவிகளான வித்யா மற்றும் சேயா போன்றவர்களின் புகைப்படங்களையும் இவர்கள் தாங்கியிருந்தனர்.

இப்பேரணியில் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள், பாசடாலை மாணவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கருகில் நிறைவடைந்தது.

இதன் போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ்  இன்று நமது நாட்டில் தொடர்ந்து சித்திரவதைகள் வன்முறைகள் இடம் பெற்றுக் கொள்டே இருக்கின்றது.

நாளுக்கு நாள் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டே இருக்கின்றது. இதை தடுப்பதற்ஷக அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் ஜுன் 26ம் திகதி உலகமெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிராக கவன ஈர்ப்பு விழிப்புனர்வு வேலைத்திட்டங்களை மேற் கொண்டு வருகின்றது என்றார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...