நிர்வாணமாக பணிபுரிய உத்தரவு? | தினகரன்

நிர்வாணமாக பணிபுரிய உத்தரவு?

 

RSM

பெலருஸ் இராச்சியத்தின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ அந்நாட்டு மக்களை நிர்வாணமாக பணிபுரியுமாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மொழியில் உரையாற்றிய அவர், உண்மையில் அவ்வாறு கூற முன்வரவில்லை என்பதோடு, வசனத் தடுமாற்றம் ஏற்பட்டதனால் அது அவ்வாறான அர்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆயினும், தங்கள் நாட்டு ஜனாதிபதி வெளியிட்ட உத்தரவை நடைமுறைப்படுத்திய பலர், தங்களது வேலைத்தளங்களில் நிர்வாணமாக அல்லது ஆடைகளை களைந்தநிலையில் பணிபுரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

"கண்டுபிடிப்புகள், தகவல் தொழில்நுட்பம், போன்றவற்றை நாம் அடைந்துள்ளோம். அத்துடன் அவை மிக எளிமையானதாக மாறிவிட்டது, எனவே அனைவரும் தங்களை மேம்படுத்தியவர்களாக பணிபுரிய வேண்டும்" என தெரிவிப்பதற்கு பதிலாக...

"..... தங்களை நிர்வாணப்படுத்தியவாறு பணிபுரிய வேண்டும்" எனத் தெரிவித்துவிட்டார்.

 

 


There is 1 Comment

arumai maduhal

Pages

Add new comment

Or log in with...