பயண ஆரம்பத்திலேயே தீ; விமானம் அவசர தரையிறக்கம் | தினகரன்

பயண ஆரம்பத்திலேயே தீ; விமானம் அவசர தரையிறக்கம்

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

241 பேருடன் பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக அது அவசர தரையிறக்கத்திற்குள்ளாக்கப்பட்டதாக சிங்கப்பூர் விமானசேவை அறிவித்துள்ளது.

போயிங் 777-300 ER வகையைச் சேர்ந்த SQ368 எனும் விமானமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

222 பயணிகள் மற்றும் 19 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூரின் ச்சங்கி (Changi) விமானநிலையத்திலிருந்து இத்தாலியின் மிலான் விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானத்தின் வலது பக்க எஞ்சின் எண்ணெய் தொடர்பில் எச்சரிக்கை செய்தி வந்ததைத் தொடர்ந்து, குறித்த எஞ்சின் தீப்பிடித்துள்ளது.

இதனை அடுத்து ச்சங்கி விமானநிலையத்தில் உடனடியாக அவசர தரையிறக்கத்திற்குள்ளாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீர் மற்றும் நுரையினால் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் விமான சேவை அறிவித்தது.

குறித்த விபத்தில் எவரும் காயத்திற்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பயணத்திற்காக இன்று (27) பிற்பகல் மற்றுமொரு விமானம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...