கபாலி எப்போது வெளியாகும்? (Video) | தினகரன்

கபாலி எப்போது வெளியாகும்? (Video)

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

இன்றளவில் சினிமா ரசிகர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி படம் எப்போது ரிலீஸாகிறது என்ற கேள்விதான். 

அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது ரஜினியின் கபாலி திரைப்படம்.

இதுவரை அப்படத்தின் இரு முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தை ஜூலை 01 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்ததோடு,  ஊடகங்களிலும் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் ரமழான் நோன்பு எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முடிவுறுவதால், அதற்கு முன்பாக படத்தை வெளியிட்டால் ரஜினியின் இஸ்லாமிய ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழகத்துக்கு இணையாக ரஜினி படங்கள் கொண்டாடப்படுகின்றமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே ஜூலை 06ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிட்டால் ஆரம்பம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது கபாலி திரைப்படத்தை ஜுலை 15 ஆம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே திகதியில்தான் கபாலியின் முதல் காட்சிக்கான சிறப்பு விமான போக்குவரத்து ஒன்று ஏர் ஏசியா விமான சேவையால் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...