காத்தான்குடி பொதுச்சந்தையில் தீ 3 கடைகள் எரிந்து நாசம் | தினகரன்

காத்தான்குடி பொதுச்சந்தையில் தீ 3 கடைகள் எரிந்து நாசம்

 

RSM

25  இலட்சத்திற்கு மேல் நஷ்டம்

காத்தான்குடி பொதுச்சந்தையில் இன்று (17) நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்வத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடைகளின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

காத்தான்குடி பொதுச் சந்தையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பிரபல்யமான வர்த்தக நிலையமான அஸ்ரப் என்பவரின் பல சரக்கு கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)

 


Add new comment

Or log in with...