தாய் இறந்தது அறியா தேவாங்கு, பால் குடித்த நிலையில் மீட்பு

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த தாய் தேவாங்கு ஒன்றும் அதன் குட்டி ஒன்றும், வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்பாவல சித்தார்த்த மத்திய மகாவித்தியாலயதிற்கு அருகிலுள்ள மின்கம்பியில் மின்சார தாக்குதலுக்குள்ளான நிலையில் குறித்த தாய்த் தேவாங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, தனது தாய் இறந்தது அறியாத அதன் குட்டி, தாயிடம் பால் குடித்தவாறு பரிதாபகரமான நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த தேவாங்கு குட்டி பிறந்து 28 நாட்கள் இருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

419 ஜயககபட்டு அலுவலகத்தின் வன உதவி அதிகாரிகளான ஆர்.பி. அபேசேகர மற்றும் ஐ.யூ. ரத்நாயக்க ஆகியோரால் இந்த தேவாங்கு குட்டி மீட்கப்பட்டு, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பண்டுலுகம விலங்கு வைத்திய பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...