தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்


தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

RSM

தபால் திணைக்கள ஊழியர்கள் ஹட்டன் நகரில் இன்று (16) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஹட்டன் நகரில் அமைந்துள்ள தபால் திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 
தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று (15) புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நிலுவையிலுள்ள மேலதிக கொடுப்பனவு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள பணி பகிஷ்கரிப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் ஹட்டன் தபால் நிலைய ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பணி பகிஷ்கரிப்பின் காரணமாக சுமார் 7 கோடிக்கு மேற்பட்ட கடிதங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்நதன்)

 


There is 1 Comment

Good newspaper

Add new comment

Or log in with...